சென்னை விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு

சென்னை விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை கட்டணம் புதன்கிழமை குறைக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை கட்டணம் புதன்கிழமை குறைக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் கரோனா பரவலை தடுக்கும் வகையில் சென்னை விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் கரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

30 நிமிடத்தில் முடிவுகளை வழங்கும் ஆர்டிபிசிஆர் சோதனைக்கு ரூ.3,400 மற்றும் 5 முதல் 6 மணிநேரத்தில் வழங்கும் ஆர்டிபிசிஆர் சோதனைக்கு ரூ.700 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கட்டணத்தை குறைக்க கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து துரித சோதனைக்கு ரூ.2,900 மற்றும் சாதாரண சோதனைக்கு ரூ.600 என கட்டணத்தை குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com