மாணவர்கள் கூட்டமாக அமர்ந்து உணவு உண்பதை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

மாணவர்கள் கூட்டமாக அமர்ந்து உணவு உண்பதை தவிர்க்க வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
மாணவர்கள் கூட்டமாக அமர்ந்து உணவு உண்பதை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

மாணவர்கள் கூட்டமாக அமர்ந்து உணவு உண்பதை தவிர்க்க வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
அண்ணா பல்கலைக்கழகத்தில் (ஏ.சி. டெக் வளாகம்) பயிலும் 763 மாணவர்களுக்கு கொரோனாத் தொற்று பரிசோதனை மேற்கொள்வதை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏ.சி. டெக் வளாகத்தில் நேற்று ஒரு மாணவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து, இந்த வளாகத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டதில் 9 மாணவர்களுக்கு எ-வகையான அறிகுறியுடன் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த 9 பேரும் கிண்டி கரோனா கிங் இன்ஸ்ட்டியூட்டில் அனுமதிக்கப்பட்டு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட 8 சளி மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், அலுவலர்கள், விடுதி காப்பாளர்கள் மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஓர் முக்கியமான அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது உணவு உண்ணும் இடங்களில் கூட்டமாக அமர்ந்து உணவு உண்ணாமல், தகுந்த சமூக இடைவெளியுடன் உணவு உண்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள் அனைவரும் குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவுக்கும் நேரம்
ஒதுக்கப்பட்டு தனித்தனியாக உணவு உண்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுவதற்கான ஆலோசனைக் கூட்டம் மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை, சென்னை மாநகராட்சி, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை ஆகிய துறைகளுடன் நாளை (10-12-2021) நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் உணவு உண்ணும் இடம், விளையாடுமிடம் போன்ற இடங்களில் சமூக இடைவெளி, முகக்கவசம், சானிடைசர் பயன்படுத்துதல் போன்றவற்றைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட உள்ளது.

இதுபோன்று திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு மாணவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டபோது, மருத்துவத் துறை செயலாளர் அனைத்து விடுதிகளும் எப்படி கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வரின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் கொரோனா தடுப்பு பணிகள் மருத்துவத்துறை மூலம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தொற்று ஏற்பட அதிக ஆபத்து நிறைந்த 13 நாடுகளிலிருந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி, 9,012 பேர்
வருகைதந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொண்டதில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
மீதமுள்ள 9,001 பயணிகளும் அவரவர் இல்லங்களில் ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறார்களா? என்பதை மருத்துவத் துறை, காவல்துறை, உள்ளாட்சி துறை, வருவாய்துறை கண்காணித்து வருகிறது. அதேபோல் தொற்று பாதிப்பு ஏற்பட குறைந்த ஆபத்து நிறைந்த நாடுகளிலிருந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி, 33,112 பேர் வருகை புரிந்துள்ளனர். இவர்களில் 2 சதவிகிதம் பேருக்கு 1,025 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 2 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
ஆக அதிக ஆபத்து மற்றும் ஆபத்து இல்லாத நாடுகளில் இருந்து வருகை புரிந்தவர்களில் மொத்தம் 13 பேருக்கு தொற்று என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த 13 பேரில் ஒருவருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல், வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். மீதமுள்ள 12 பேரில் கிண்டி கிங் இன்ஸ்ட்டியூட்டில் மருத்துவமனையில் 7 பேரும், திருச்சி மகாத்மா காந்தி மருத்துவமனையில் 2 பேரும், நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருவரும், தனியார் மருத்துவமனைகளில் 2 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 
இப்போது அவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கின்றனர். இவர்களுடைய சளி மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. பெங்களூருவில் உள்ள இன்ஸ்டெர்ம் நிறுவனத்திற்கு தொடர்ந்து மருத்துவத் துறை செயலாளர் பேசிக்கொண்டிருக்கிறார். இன்று அல்லது நாளை பரிசோதனை முடிவுகள் அனுப்பப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள். இப்போது 12 பேருக்கும் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளில் ‘ஒமைக்ரான் பாதிப்பு’ என்பது உறுதிசெய்யப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ஜெ.இராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., தெற்கு வட்டார துணை ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங் காஹ்லோன் இ.ஆ.ப., மற்றும் அண்ணாப் பல்கலைக்கழக அலுவலர்கள் மற்றும் அரசு உயரலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com