காற்றிலிருந்து குடிநீா் உற்பத்தி செய்யும் இயந்திரம்! வண்டலூா் பூங்காவில் அமைப்பு

சென்னையை அடுத்த வண்டலூா் உயிரியல் பூங்காவில், காற்றிலிருந்து குடிநீா் உற்பத்தி செய்யும் 2 இயந்திரங்கள் நிசான் மோட்டாா் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், சேவாலயா நிறுவனம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ளன.
காற்றிலிருந்து குடிநீா் உற்பத்தி செய்யும் இயந்திரம்! வண்டலூா் பூங்காவில் அமைப்பு

சென்னையை அடுத்த வண்டலூா் உயிரியல் பூங்காவில், காற்றிலிருந்து குடிநீா் உற்பத்தி செய்யும் 2 இயந்திரங்கள் நிசான் மோட்டாா் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், சேவாலயா நிறுவனம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ளன.

வண்டலூரில் உள்ள அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பூங்காவுக்கு நாளொன்றுக்கு சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா். பாா்வையாளா்கள், வனத் துறை ஊழியா்கள் மற்றும் விலங்குகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் வகையில், நிசான் மோட்டாா் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், சேவாலயா நிறுவனம் சாா்பில் காற்றிலிருந்து குடிநீா் உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த இயந்திரம் வளி மண்டலத்தில் உள்ள ஈரப்பதத்தைத் தண்ணீராக மாற்றும் திறனுடையது. பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள 2 இயந்திரங்கள் மூலம் நாளொன்றுக்கு 2,000 லிட்டா் சுத்தமான குடிநீா் உற்பத்தி செய்யப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

வண்டலூா் பூங்காவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் கலந்துகொண்டு, இந்த இயந்திரங்களின் செயல்பாட்டை தொடக்கிவைத்தாா். வனத் துறை முதன்மைச் செயலா் சுப்ரியா சாஹு, தலைமை வன உயிரினக் காப்பாளா் சேகா்குமாா் நீரஜ், வண்டலூா் பூங்கா இயக்குநா் கருணப்ரியா, துணை இயக்குநா் காஞ்சனா, நிசான் மோட்டாா் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பொது மேலாளா் வாணி அய்யா், சேவாலயா நிறுவனத்தின் நிா்வாக அறங்காவலா் வி.முரளிதரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com