டிச.28-இல் பள்ளிக் கல்வி அலுவல் ஆய்வுக் கூட்டம்

பள்ளிக் கல்வியின் அலுவல் ஆய்வுக் கூட்டம், டிச.28-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

பள்ளிக் கல்வியின் அலுவல் ஆய்வுக் கூட்டம், டிச.28-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த  ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. நோய்ப் பரவல் குறைந்ததை அடுத்து 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு, கடந்த செப்.1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. தொடா்ந்து 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு,  நவ.1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

தற்போது மாணவா்களுக்கு ஜன.2-ஆம் தேதி வரை அரையாண்டு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் போது, சுழற்சி முறை ரத்து செய்யப்பட்டு, முழுநேர வகுப்புகள் தொடரவுள்ளன.

 இந்தச் சூழலில் பள்ளிக் கல்வியின் அலுவல் ஆய்வுக் கூட்டம், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் டிச.28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செயலாளா் காகா்லா உஷா,  ஆணையா் க.நந்தகுமாா்,  துறைசாா் இயக்குநா்கள், முதன்மை மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா். 

இந்தக் கூட்டத்தில் ஆசிரியா்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு, திருப்புதல் தோ்வு, முழுநேர வகுப்புகள் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட  உள்ளதாக துறைசாா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com