சிவகாசி: தடைசெய்யப்பட்ட நெகிழிப்பையைத் தயாரித்த ஆலைக்கு சீல்

சிவகாசி அருகே தடைசெய்யப்பட்டுள்ள நெகிழிப்பை தயாரித்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக சிவகாசி வட்டாட்சியர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
சிவகாசி: தடைசெய்யப்பட்ட நெகிழிப்பையைத் தயாரித்த ஆலைக்கு சீல்
சிவகாசி: தடைசெய்யப்பட்ட நெகிழிப்பையைத் தயாரித்த ஆலைக்கு சீல்

சிவகாசி அருகே தடைசெய்யப்பட்டுள்ள நெகிழிப்பை தயாரித்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக சிவகாசி வட்டாட்சியர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஸ்டேட் பாங்க் காலனி கோபிநாத் என்பவருக்கு சொந்தமான நெகிழிப்பை தயாரிக்கும் ஆலை செங்கமலநாச்சியார்புரம் உள்ளது தமிழக அரசு நெகிழிப் பைகளை தடை விதித்துள்ளது .

இந்நிலையில் இந்த ஆலையில் கடந்த 17ஆம் தேதி விருதுநகர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர் ஆய்வில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள நெகிழிகள் தயாரிக்கும் பணி நடைபெற்றது தெரியவந்தது .

இதையடுத்து அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் சீல் வைக்கப்பட்ட இந்த ஆலையில் மீண்டும் நெகிழிப் பைகள் தயாரிக்கும் பணி நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாசுக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் அந்த ஆலையில் திங்கட்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில் சீல் வைக்கப்பட்டிருந்த ஆலையின் பின் வாசல் கதவினை திறந்து தடை செய்யப்பட்டுள்ள நெகிழிகள் தயாரிப்பது தெரியவந்ததை அடுத்து அந்த ஆலை மீண்டும் சீல் வைக்கப்பட்டது. சிவகாசி வட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள நெகிழிப் பையைத் தயாரிக்க கூடாது என்றும் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com