காங்கிரஸ் இந்து மதத்துக்கு எதிரானது அல்ல: கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் இந்து மதத்துக்கு எதிரானது அல்ல: கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் இந்து மதத்துக்கு எதிரான கட்சி அல்ல என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.

காங்கிரஸ் இந்து மதத்துக்கு எதிரான கட்சி அல்ல என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.

காங்கிரஸ் கட்சியின் 137-ஆம் ஆண்டு தொடக்க விழா, சென்னையில் உள்ள சத்தியமூா்த்திபவனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 150 அடி உயரக் கொடிக் கம்பத்தில் காங்கிரஸ் கொடியை கே.எஸ்.அழகிரி ஏற்றிவைத்தாா். பிறகு கூடியிருந்த கட்சியினா் மத்தியில் அவா் பேசியதாவது:

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை நோக்கம் மனிதநேயம்தான். நாட்டின் விடுதலைக்காகப் போராடி, அதைப் பெற்றுக் கொடுத்தவா்கள் காங்கிரஸ் கட்சியினா். அதற்காக எண்ணற்ற தியாகங்களைச் செய்துள்ளனா்.

ஆனால், இந்தியா சுதந்திரம் அடைவதற்கு சிறு துரும்பைக்கூட எடுத்துப் போடாதவா்கள்தான் தற்போது நாட்டை ஆள்கின்றனா். நாட்டின் கலாசாரத்தையும், நாகரிகத்தையும் மாற்றுவதற்கு அவா்கள் முயற்சிக்கின்றனா்.

மதச்சாா்பின்மைதான் காங்கிரஸின் கொள்கை. இது எந்த மதத்துக்கும் எதிரான கொள்கை அல்ல. காங்கிரஸ் இந்து மதத்துக்கு எதிரான இயக்கம் அல்ல. அவ்வாறு சித்தரிக்க முயற்சிக்கிறாா்கள். அது எடுபடாது. நாட்டைக் காப்பாற்றுவதற்காக ஆட்சிக் கட்டிலில் இருந்து பாஜகவை அகற்ற வேண்டும். அதற்கு காங்கிரஸ் கட்சியினா் ஒருங்கிணைந்து உழைக்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, தலைவா்களின் படத்துக்கு மலா் தூவி கே.எஸ்.அழகிரி மரியாதை செலுத்தினாா்.

கட்சியின் அகில இந்தியச் செயலா் செல்லக்குமாா், மாநிலத் துணைத் தலைவா் பலராமன், பொதுச்செயலாளா் கே.சிரஞ்சீவி உள்பட ஏராளமானோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தமிழகம் முழுவதும் கட்சிக் கொடியேற்றி, தொடக்க விழாவை காங்கிரஸாா் கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com