ஊத்துக்கோட்டையில் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

ஊத்துக்கோட்டையில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 
ஊத்துக்கோட்டையில் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

ஊத்துக்கோட்டையில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை யில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்வுக்கு திருவள்ளூர் மாவட்ட அலுவலர் சாந்தி மற்றும் ஆவடி கல்வி மாவட்ட அலுவலர் கற்பகம் தலைமை வகித்தனர். ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள்  மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி 456 வண்டிகளும் பெரியபாளையம் அரசு மேல்நிலை பள்ளி 160 மிதிவண்டிகளும் கடலூர் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஐம்பத்தொரு மிதிவண்டிகளை சீதஞ்செரி அரசு மேல்நிலைப்பள்ளி ஐம்பத்தொரு மிதிவண்டிகளை மெய்யூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 90 மிதிவண்டிகள் கன்னிப் புத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 75 மிதிவண்டிகள அந்த பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 63 மிதிவண்டிகளை மொத்தம் 1002 மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் பள்ளி மாணவர்களுக்கு வழங்கினார்.

மேலும் அரசு பள்ளியில் இருந்தே தன்னுடைய தொகுதியில் மறுத்ததாக தேர்வு செய்யும் மாணவர்களுக்கு வருடம் வருடம் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். சட்டமன்ற உறுப்பினர் முடிவில் தலைமையாசிரியர் சுதாகர் மற்றும் மகேஸ்வரன் நன்றி தெரிவித்தனர். விழாவில் பெற்றோர்கள் கழக உறுப்பினர்கள் இருபால் ஆசிரியப் பெருமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com