கிருஷ்ணகிரி அருகே சரக்குப் பெட்டக லாரியில் தீ: பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து சேதம்

கிருஷ்ணகிரி அருகே குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த துணி பாரம் ஏற்றிச் சென்ற லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அதிலிருந்த பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து சேதமடைந்தன. 
தீப்பிடித்து எரியும் சரக்குப் பெட்டக லாரி- தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள். 
தீப்பிடித்து எரியும் சரக்குப் பெட்டக லாரி- தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள். 


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த துணி பாரம் ஏற்றிச் சென்ற லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அதிலிருந்த பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து சேதமடைந்தன. 

கிருஷ்ணகிரி அருகே குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூரில் இருந்து தில்லிக்கு துணி பாரம் ஏற்றிச் சென்ற சரக்குப் பெட்டக  லாரி, காளி கோவில் அருகே சனிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் சென்றுகொண்டிருந்தது.
அப்போது லாரிக்குள் இருந்து திடீரென கரும்புகை வருவதை அறிந்த லாரி ஓட்டுநர்  நதிம் ஷா, லாரியை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கி விட்டாா். 

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி, பர்கூர் ஆகிய  தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தார்.  

விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் லாரியில் பரவிய தீயை கட்டுப்படுத்தி, தீயை முற்றிலும் அணைத்தனர்.

இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து சேதம் ஆனது. 

இது குறித்து ஓட்டுநர்  நதிம் ஷா கொடுத்த புகாரின் பேரில் கந்திகுப்பம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். 

இந்த தீ விபத்தால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com