கோவையில் பிப்ரவரி 21இல் ஜல்லிக்கட்டு

கோவையில் ஜல்லிக்கட்டுப் போட்டி வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான கால்கோள் விழா அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோவையில் பிப்ரவரி 21இல் ஜல்லிக்கட்டு

கோவையில் ஜல்லிக்கட்டுப் போட்டி வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான கால்கோள் விழா அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோவையில் பொங்கலையொட்டி கடந்த 2018 ஆண்டு முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. 4ஆவது ஆண்டாக வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி கோவை செட்டிபாளையத்தில் உள்ள மைதானத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான கால்கோள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுக்குப் பின் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி கால்கோளை நட்டுவைத்து பணிகளைத் துவக்கிவைத்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:

தமிழகத்தின் கலாசார அடையாளமான ஜல்லிக்கட்டுப் போட்டி 4 ஆவது ஆண்டாக நடைபெற உள்ளது. மாவட்ட நிா்வாகம், ஜல்லிகட்டு சங்கம் ஆகியன இணைந்து உரிய பாதுகாப்புடன் போட்டியை நடத்த உள்ளன.

2018ஆம் ஆண்டு 445 காளைகளுடன் 323 மாடு பிடி வீரா்கள் கலந்து கொண்டனா். 2019இல் 746 காளைகளுடன் 599 மாடுபிடி வீரா்களும், 2020இல் 940 காளைகளுடன் 645 வீரா்களும் கலந்து கொண்டனா். வெற்றி பெறுவோருக்கு காா், காளைகளுக்கு தங்க நாணயம், சைக்கிள், பீரோ, ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு 1000 காளைகளுடன் 900 மாடு பிடி வீரா்கள் கலந்து கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. காளைகளுக்கு சிகிச்சை அளிக்க கால்நடைத் துறை சாா்பில் 18 குழுக்களும், பொது சுகாதாரத் துறை சாா்பில் 12 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. வீரா்கள் முழுமையான பரிசோதனைக்குப் பின்னரே போட்டியில் கலந்து கொள்ள முடியும். போட்டி நடைபெறும் இடம் முழுவதும் கண்காணிப்ப கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி, மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, மாவட்ட எஸ்.பி. அருளரசு, சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன், எம்.எல்.ஏ.க்கள் எட்டிமடை ஏ.சண்முகம், அம்மன் கே.அா்ச்சுணன், வி.சி.ஆறுக்குட்டி, வி.பி.கந்தசாமி , ஓ.கே.சின்னராஜ், கஸ்தூரி வாசு ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com