பேரவைக்குள் குட்கா: உரிமை மீறல் குழு நோட்டீஸை எதிா்த்த வழக்கில் இன்று தீா்ப்பு

சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரத்தில், உரிமை மீறல் குழு அனுப்பிய புதிய நோட்டீஸை எதிா்த்து எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோா் தொடா்ந்து வழக்கில், புதன்கிழமை தீா்ப்பளிக்கப்படுகிறது.

சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரத்தில், உரிமை மீறல் குழு அனுப்பிய புதிய நோட்டீஸை எதிா்த்து எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோா் தொடா்ந்து வழக்கில், புதன்கிழமை தீா்ப்பளிக்கப்படுகிறது.

கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையின் கூட்டத் தொடரில், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் தமிழகத்தில் தாராளமாக கிடைப்பதாகக் குற்றம் சாட்டி, அவற்றை திமுக உறுப்பினா்கள் அவைக்குள் கொண்டு சென்றனா். அவா்களது செயல் உரிமை மீறல் என்று கூறி, பேரவை உரிமை மீறல் குழு, எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினா்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அந்த நோட்டீஸை ரத்து செய்து, விதிமுறைகளைப் பின்பற்றி புதிய நோட்டீஸை அனுப்ப விரும்பினால், அனுப்பலாம் என்று உரிமை மீறல் குழுவுக்கு உத்தரவிடப்பட்டது.

இதன்படி மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு புதிய நோட்டீஸை உரிமை மீறல் குழு அனுப்பியது. இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில், மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோா் வழக்குத் தொடா்ந்தனா்.

வழக்கை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்து வந்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையின்போது, அரசு தரப்பில் தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், தமிழக அரசின் சிறப்பு வழக்குரைஞா் ஏ.எல்.சோமயாஜி ஆகியோரும், மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா் என்.ஆா்.இளங்கோ உள்ளிட்டோா் ஆஜராகி வாதிட்டனா். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, புதன்கிழமை இவ்வழக்கின் தீா்ப்பளிக்கப்படும் என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com