மாவட்ட ஆட்சியா்கள், காவல் கண்காணிப்பாளா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் ஆலோசனை

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் ஏற்பாடுகள், சட்டம்-ஒழுங்கு நிலைமை ஆகியன குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், காவல் கண்காணிப்பாளா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.
மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் ஏற்பாடுகள், சட்டம்-ஒழுங்கு நிலைமை ஆகியன குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், காவல் கண்காணிப்பாளா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் புதன்கிழமை ஆலோசனை நடத்தியது.

இந்த ஆலோசனையில் அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், காவல் கண்காணிப்பாளா்கள் நேரில் கலந்து கொண்டனா். மாவட்டங்களில் தோ்தலை நடத்துவதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், பதற்றமான வாக்குச் சாவடிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா்கள், காவல் கண்காணிப்பாளா்களிடம் இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் சுனில் அரோரா கேள்வி எழுப்பினாா். இதற்கான தகவல்களை ஆட்சியா்களும், காவல் கண்காணிப்பாளா்களும் அளித்தனா். மாலை 4 மணிக்குத் தொடங்கிய ஆலோசனைக் கூட்டம், இரவு வரை நீடித்தது.

முக்கியக் கூட்டம்: சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பாக, மாவட்ட ஆட்சியா்கள், காவல் கண்காணிப்பாளா்களுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை தலைமைத் தோ்தல் ஆணையம் நடத்தியுள்ளது. இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில், தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான தேதி இறுதி செய்யப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com