கட்டுமான பொருள்கள் விலை ஏற்றம்: அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சிமெண்ட் இரும்பு கம்பி மற்றும் கட்டுமான பொருட்களின் கடுமையான விலை ஏற்றத்தைக் கண்டித்து அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கத்தின் சார்பில் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
கட்டுமான பொருள்கள் விலை ஏற்றம்: அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சிமெண்ட் இரும்பு கம்பி மற்றும் கட்டுமான பொருட்களின் கடுமையான விலை ஏற்றத்தைக் கண்டித்து அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கத்தின் சார்பில் அடையாள வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்க செங்கல்பட்டு மைய தலைவர் வி.வெங்கடேசன் தலைமை தாங்கிப் பேசினார். கல்பாக்கம் மைய தலைவர் கே.மதுரை முத்து, செங்கல்பட்டு உரிம அளவர்கள் மற்றும் பொறியாளர்கள் சங்கத்தின் செங்கல்பட்டு தலைவர் ஓ.எம்.ஜவஹர், அரசு பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்கள் சங்கம் செங்கல்பட்டு தலைவர் பி.பிரபாகரன், தமிழ்நாடு கட்டுமான உடலுழைப்பு தொழிலாளர்கள் நல மத்திய ஐக்கிய சங்கத் தலைவர் வி.ஜெ.குமார், பொதுக்குழு உறுப்பினர் கே.கே. ராகவன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்துப் பேசினர். முன்னதாக செங்கல்பட்டு, கல்பாக்கம் மைய செயலாளர் கே.ரமேஷ்பாபு வரவேற்றுப் பேசினார்.

கட்டுமான பணிக்கு முக்கிய ஆதர பொருளே சிமெண்டும் கம்பியும் தான், மேலும் கடுமையான அனைத்து பொருள்களும் கடுமையாக விலை ஏற்றப்பட்டுள்ளதால் பொறியாளர்கள் கட்டுமான தொழிலாளர்கள் என கட்டுமான பணிகளில் ஈடுபடுவோர் அனைவரும் பாதிக்கப்படும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் வாழ்வாதாரமே நலிவடைந்து உள்ள நிலையில் கட்டுமான பொருள்களின் கடுமையான விலை ஏற்றத்தால் பொறியாளர்கள் கட்டுமான பணியாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

கட்டுமான பொருள்கள் விலை ஏற்றத்தை மத்திய மாநில அரசுகள் உடனடியாக விலையினை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒழுங்குமுறை ஆணையம் அமைந்து மத்திய மாநில அரசுகள் பொறியாளர்கள் கட்டுமான பணியாளர்களும் குடும்பத்தையும் கருத்தில் கொண்டு வாழ்வாதாரம் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க அரசே நிலை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இந்த தீர்மான கோரிக்களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தமிழ்நாடு கட்டுமான உடலுழைப்பு தொழிலாளர்கள் நல ஐக்கிய சங்க மாநில பொதுச்செயலாளர் எம். எல் .ஆர் .ராஜசேகரன் மாநிலத் தலைவர் பி.ஜே.குமார், பொருளாளர் ஜான் விஜயகுமார் உள்ளிட்ட அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கம், செங்கல்பட்டு மற்றும் கல்பாக்கம் செங்கல்பட்டு உரிம ஆர்வலர்கள் மற்றும் கட்டுமான பொறியாளர்கள் சங்கம் தமிழ்நாடு கட்டுமான உடலுழைப்பு தொழிலாளர் நல மத்திய ஐக்கிய சங்கம், செங்கல்பட்டு அரசு ஒப்பந்ததாரர்கள் சங்கம் ஆகிய சங்கங்களின் நிர்வாகிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கலந்துகொண்டு பேசினார். முடிவில் பொதுக்குழு உறுப்பினர் கே.கே. ராகவன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com