ஊத்தங்கரையில் புதிய தீயணைப்பு நிலையம் திறப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ரூ. 72 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய கட்டடங்களை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
ஊத்தங்கரையில் புதிய தீயணைப்பு நிலையத்தை சட்டப்பேரவை உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ் தலைமை வகித்து ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் ஸ்ரீவித்யாமந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வே. சந்திரசேகரன், நிலவள வங்கி தலைவர் சாகுல் அமீது, மிட்டப்பள்ளி கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஏசி.தேவேந்திரன், 1056 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் பி.கே. சிவானந்தம், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் இளையராஜா, தீயணைப்பு நிலைய  மாவட்ட அலுவலர் பொறுப்பு ராமச்சந்திரன், நிலைய அலுவலர் சக்திவேல், மற்றும் நிலைய பணியாளர்கள் ராமமூர்த்தி முனுசாமி, ஆர்.கே .ராஜா, முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் சிக்னல் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com