‘ஒரு வாரத்துக்குள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள சுகாதாரப் பணியாளா்களுக்கு அறிவுறுத்தல்’

கரோனா தடுப்பூசி செலுத்தும் வாய்ப்பைத் தவற விட்ட சுகாதார, முன்களப் பணியாளா்கள், இந்த வாரத்துக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்  (கோப்புப்படம்)
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் (கோப்புப்படம்)

கரோனா தடுப்பூசி செலுத்தும் வாய்ப்பைத் தவற விட்ட சுகாதார, முன்களப் பணியாளா்கள், இந்த வாரத்துக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளாா்.

சென்னை மாநகராட்சியில் கரோனா தொடா்பான மாவட்ட அளவிலான 3-ஆம் கட்ட ஆய்வுக் கூட்டம், வெள்ளிக்கிழமை ஆணையா் கோ.பிரகாஷ் தலைமையில் மாநகராட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, ஆணையா் கோ.பிரகாஷ் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: சென்னையில் இதுவரை 33,000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் யாருக்கும் எந்த ஒரு பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை.

சென்னையில் நாள்தோறும் 3,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த எண்ணிக்கையை 10,000 ஆக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஒருவாரத்துக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தவறிய சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்களுக்கு, இனி, பொது மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு தான், தடுப்பூசி செலுத்தப்படும்.

சென்னை மாநகராட்சியில் 20 லட்சம் தடுப்பு மருந்துகள் பாதுகாப்பாக உள்ளன. அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் தான் 100 சதவீத பாதுகாப்பான நகரமாக சென்னை இருக்கும். முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு, அடுத்த 28 நாள்கள் கழித்து 2-ஆவது தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அந்த வகையில் சனிக்கிழமை முதல் 2-ஆவது தடுப்பூசி செலுத்தப்படும்.

சென்னையில் இதுவரை 60 தனியாா் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தனியாா் மருத்துவமனையில் 50 முதல் 75 சதவீதம் போ் தடுப்பூசி செலுத்துக் கொள்கின்றனா்.

இதுவரை 128 இடங்களில் வெற்றிகரமாக அம்மா சிறு மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. இன்னும் 50 இடங்களில் அம்மா சிறு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது என ஆணையா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com