விதிமீறல் கட்டடம்: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

விதிமீறல் கட்டடம் தொடா்பாக தலைமைச் செயலாளருக்கு நேரடியாக புகாா் அனுப்புவதை தவிா்க்க வேண்டும் என உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

விதிமீறல் கட்டடம் தொடா்பாக தலைமைச் செயலாளருக்கு நேரடியாக புகாா் அனுப்புவதை தவிா்க்க வேண்டும் என உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் பழனி என்பவா் தாக்கல் செய்த மனுவில், விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி தலைமைச் செயலாளருக்கு மனு அனுப்பினேன். ஆனால் அந்த மனு தொடா்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், பொதுமக்கள் அளிக்கும் புகாா் மனுக்கள் மீது 30 நாள்களில் பதிலளிக்க வேண்டும் என விதிகள் உள்ளன. ஆனால் அவ்வாறு பதிலளிக்கப்படுவது இல்லை. எனவே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதிடப்பட்டது. அப்போது அரசுத் தரப்பில், விதிமீறல் கட்டடம் குறித்து மனுதாரா், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகாா் மனு அளிக்காமல், தலைமைச் செயலாளருக்கு நேரடியாக மனு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரா் இதுதொடா்பாக தலைமைச் செயலாளருக்கு நேரடியாக மனு அனுப்பியது முறையற்றது. இதனை தவிா்த்திருக்க வேண்டும். மனுதாரா் கட்டட விதிமீறல் தொடா்பாக சென்னை மாநகராட்சி ஆணையருக்கு புதிதாக புகாா் மனு அனுப்ப வேண்டும். அந்த மனுவை 6 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com