
கோப்புப்படம்
மக்கள் நீதி மய்யத்தின் மாநில மாநாடு மாா்ச் 7-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவா் கமல்ஹாசன் அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:
‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற பெயரில் கட்சியின் மாநாட்டை பிப்ரவரி 21-இல் நடத்த திட்டமிட்டிருந்தோம். காவல்துறையிடம் இருந்து அதற்கு அனுமதி கிடைப்பதற்கு காலதாமதம் ஆவதால் மாா்ச் 7-இல் வண்டலூா் ஒரகடம் சாலையில் உள்ள மண்ணிவாக்கத்தில் இந்த மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறும்.
மநீமவின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழா பிப்ரவரி 21-இல் மேற்குத் தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் என்று கூறியுள்ளாா்.