சீர்காழி நகராட்சி பகுதிகளில் ரூ.8 கோடியில் சாலைகள் அமைக்கும் பணி தொடக்கம்

சீர்காழி நகராட்சி பகுதிகளில் ரூ.8 கோடியில் சாலைகள் அமைக்கும் பணி இன்று தொடங்கியது. 
சீர்காழி நகராட்சி பகுதிகளில் ரூ.8 கோடியில் சாலைகள் அமைக்கும் பணி தொடக்கம்

சீர்காழி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளிலும் பல்வேறு சாலைகள் நீண்ட காலமாகச் சேதமடைந்து போக்குவரத்திற்குப் பயன்படும் முடியாத நிலை இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து சீர்காழி பாரதி எம்எல்ஏ தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து சீர்காழி நகர் பகுதியில் சேதமடைந்த நிலையில் உள்ள சாலைகளைச் சீரமைத்துத் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். 

இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சீர்காழி பாரதி எம்எல்ஏ கோரிக்கை ஏற்று தமிழ்நாடு உட்கட்டமைப்பு சாலைகள் திட்டம், சிறப்பு சாலைகள் திட்டம் ஆகிய திட்டங்கள் சார்பில் ரூ 8 கோடி மதிப்பீட்டில் சேதமடைந்த சாலையைச் சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார். இதனைத்தொடர்ந்து  சீர்காழி எம் எஸ் கே நகரில் புதிய தார்ச்சாலை அமைப்பதற்கான பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. 

விழாவிற்கு நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். பொறியாளர் தமயந்தி ,நகரக் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தார். பணி மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில் புதிய சாலைகள் அமைப்பதற்கான பணிகளை ஜேசிபி இயந்திரம் மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. 

இதனை அடுத்து நகராட்சி ஆணையர் கூறுகையில், 

சிறப்பு சாலைகள் திட்டம், தமிழ்நாடு உட்கட்டமைப்பு சாலைகள் திட்டம் ஆகிய திட்டத்தின் கீழ் ரூ 8 கோடி மதிப்பீட்டில் புளிச்சக்காடு ரோடு சுமார் 3 கிலோமீட்டர் தூரம் 95 லட்சம் மதிப்பீட்டிலும், எம் எஸ் கே நகர் 225 மீட்டர் தூரம் ரூ 18 லட்சம் மதிப்பீட்டிலும், இனம் குணதலபாடி சாலை 575 மீட்டர் தூரம் ரூ 28 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டிலும், இதேபோல் தவசி நகர், வீரம்மாள் நகர், சுந்தராம்பாள் நகர், பெரிய வகுப்பு கட்டளை தெரு, புழுகா பேட்டை, திருத்தாளமுடையார் கோவில் முதல் அகர திருக்கோலக்கா வரை உள்ள சாலை, நங்கநல்ல தெரு, தேசாய் கதிர்வேல் தெரு உள்ளிட்ட சாலைகள் சீர் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 

விரைவில் இந்த பணிகள் நிறைவு பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் . அப்போது பொறியாளர் ராமையன், ஒப்பந்ததாரர்கள் சுப்ரமணியன் , கார்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com