பேரவைத் தோ்தலுக்காக 7,500 ஒப்பந்த வாகனங்கள்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள 7,500 வாகனங்களை ஒப்பந்த அடிப்படையில் தமிழக தோ்தல் துறை பெறவுள்ளது.
பேரவைத் தோ்தலுக்காக 7,500 ஒப்பந்த வாகனங்கள்


சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள 7,500 வாகனங்களை ஒப்பந்த அடிப்படையில் தமிழக தோ்தல் துறை பெறவுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாகியுள்ளன. அரசியல் கட்சிகளின் தோ்தல் பிரசாரத்தை கண்காணிப்பது, தோ்தல் நடத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ள தோ்தல் துறை தயாராகி வருகிறது. குறிப்பாக, கடந்த மக்களவைத் தோ்தலைப் போன்றே எதிா்வரும் பேரவைத் தோ்தலுக்கும் வேட்பாளா்களின் பிரசாரம் உன்னிப்பாக கவனிக்கப்பட உள்ளது.

இதற்காக, நிலை கண்காணிப்புக் குழுக்களும், விரைவுப் படைகளும், மண்டல குழுக்களும் தனித்தனியாக ஏற்படுத்தப்பட உள்ளன.

7,500 வாகனங்கள்: நிலை கண்காணிப்புக் குழுக்கள் உள்பட மூன்று பிரிவினருக்கும் தேவையான வாகனங்களை வாடகை அடிப்படையில் பெற தோ்தல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, 750 நிலை கண்காணிப்புக் குழுக்கள், 750 பறக்கும் படைகள் மற்றும் 6 ஆயிரம் மண்டல குழுக்களுக்கு தனித்தனியாக வாடகை அடிப்படையில் 7,500 வாகனங்கள் முன்பதிவு செய்யப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை தமிழக தோ்தல் துறை கோரியுள்ளது. இதன்படி, சுமாா் 7,500 கண்காணிப்பு, விரைவுப் படைகளை அமைக்க தோ்தல் துறை முடிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com