சங்ககிரியில் 137 பயனாளிகளுக்குத் திருமண நிதியுதவி வழங்கல் 

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட  22 ஊராட்சிகளைச் சேர்ந்த 137 பேருக்கு திருமண நிதியுதவி வழங்கும் திட்டம்  ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜா திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் பயனாளிக்கு ஒரு பவுன் தங்ககாசினை வழங்குகிறார்.
சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜா திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் பயனாளிக்கு ஒரு பவுன் தங்ககாசினை வழங்குகிறார்.

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட  22 ஊராட்சிகளைச் சேர்ந்த 137 பேருக்கு திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ்  தலா ஒரு பவுன் தங்கக் காசுகள் வழங்கும் விழா ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி எம்.மகேஸ்வரிமருதாஜலம் இவ்விழாவிற்கு தலைமை வகித்தார். 

சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜா சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்தில் 2018-2019 ம் நிதியாண்டில் மூவாலூர் இராமாமிர்தம் அம்மையார் நிதி உதவி திட்டத்தில் விண்ணப்பித்த 127 பேருக்கும், ஈ.வே.ரா மணியம்மை விதவை மகள் திருமண உதவித்திட்டத்தின் கீழ் 6 பேருக்கும், அன்னை தெரசா ஆதரவற்றோர் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 4 பேருக்கும் மொத்தம் 137 பேருக்கு தலா ஒரு பவுன் தங்கக் காசுகளை வழங்கினார். 

அப்போது அவர் பேசியது:-

திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் வழங்குவதில்லை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்த இந்த திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி  நிதிசுமைகள் இருந்த போதிலும் தொடர்ந்து பெண்களின் பொருளாதரா முன்னேற்றத்திற்காக வழங்கி வருகிறார். 

திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் தங்ககாசுகளை பெற வந்த பயனாளிகளின் ஒரு பகுதியினர். 
திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் தங்ககாசுகளை பெற வந்த பயனாளிகளின் ஒரு பகுதியினர். 

மேலும் ஒரு பெண்ணின் திருமணத்திற்குப் பின்னர் கர்ப்பிணிப் பெண்களுக்கு குழந்தை பெறும் வரை  அரசு மருத்துவமனைகளில்  சிகிச்சை எடுத்துக்கொள்ள பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டங்களுக்கான நிதியுதவி தொகைகள் வரும் ஆண்டில் அதிகப்படுத்தி மேலும் கூடுதலாக பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட உள்ளன என்றார். 

இதற்கான அறிவிப்புகள் அதிமுக தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட இருக்கின்றது என்றார்.  எனவே பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வர் தலைமையிலான அரசுக்கு வரும் காலங்களில் பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றார். 

ஊராட்சி ஒன்றியக்குழுதுணைத்தலைவர் ஏ.பி.சிவக்குமாரன்,  ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் என்.எஸ்.ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) எம்.அனுராதா நகர கூட்டுறவு வங்கித்தலைவர் என்.சி.ஆர்.ரத்தினம், அதிமுக கிழக்கு ஒன்றிய துணை செயலர் மருதாஜலம், கூட்டுறவு பண்டகசாலைத்தலைவர் சி.செல்வம், அதிமுக முன்னாள் தொகுதிகழகச் செயலர் வி.ஆர்.ராஜா உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com