சீமானூத்து கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி: காளைகளுக்கு முன்பதிவு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சீமானூத்து ஊராட்சிக்குட்பட்ட பெருமாள்கோவில் பட்டி ஜல்லிக்கட்டு நடைபெற இருப்பதால் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளுக்கு முன் பதிவு மற்றும் டோக்கன் வழங்கப்பட்டது. 
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளுக்கு முன்பதிவு மற்றும் டோக்கன் வழங்குவதற்காக வரிசையில் காத்திருக்கும் காளையின் பெண்கள் உரிமையாளர்கள்.
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளுக்கு முன்பதிவு மற்றும் டோக்கன் வழங்குவதற்காக வரிசையில் காத்திருக்கும் காளையின் பெண்கள் உரிமையாளர்கள்.

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சீமானூத்து ஊராட்சிக்குட்பட்ட பெருமாள்கோவில் பட்டி ஜல்லிக்கட்டு நடைபெற இருப்பதால் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளுக்கு முன் பதிவு மற்றும் டோக்கன் வழங்கப்பட்டது. 

உசிலம்பட்டி அருகே சீமானூத்து கிராமத்தில் 22 வருடங்களுக்கு பிறகு நடைபெறும் பழமையான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி 24 -ஆம் தேதி புதன்கிழமை சீமானுத்து ஊராட்சி மன்ற தலைவர் அஜித் பாண்டி முன்னிலையில் நடைபெற உள்ள நிலையில்,  மாடுபிடி வீரர்களுக்கு முன்பதிவு மற்றும் டோக்கன் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. 


ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளுக்கு முன்பதிவு மற்றும் டோக்கன் வழங்குவதற்காக வரிசையில் காத்திருக்கும் காளையின் ஆண் உரிமையாளர்கள்.

இந்நிலையில், சனிக்கிழமை காளைகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதில், உசிலம்பட்டி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், பகுதியைச் சேர்ந்த ஏராளமான காளையின் பெண்கள் உரிமையாளர்கள் மற்றும் ஆண்கள் தங்களது ஆதார் கார்டை கொண்டுவந்து  முன்பதிவு செய்ய கலந்து கொண்டனர் இதில், வருவாய் அதிகாரிகள், மற்றும் கால்நடை துறை அதிகாரிகள் காவல்துறையினர் முன்னிலையில் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com