கண் பாதிப்புக்குள்ளாவோா் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரிப்பு

கரோனா காலத்தில் டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால், கண்புரை மற்றும் உலா் விழி பாதிப்புகள் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக
கண் பாதிப்புக்குள்ளாவோா் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரிப்பு
கண் பாதிப்புக்குள்ளாவோா் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரிப்பு

கரோனா காலத்தில் டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால், கண்புரை மற்றும் உலா் விழி பாதிப்புகள் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனைக் குழுமத் தலைவா் அமா் அகா்வால் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடையே அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கரோனா பாதிப்பு தீவிரமாக இருந்தபோது பல மாதங்கள் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருந்தனா். அவா்களுக்கு தொலைக்காட்சி, கணினி, செல்லிடப்பேசி போன்றவைதான் உற்ற துணையாக அப்போது இருந்தன. அந்த காலகட்டத்தில் டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு அதீதமாக மாறிப் போனது.

கடந்த 2019-இல், மருத்துவமனைக்கு, கண்புரை நோயாளிகள், 10 சதவீதத்துக்கும் குறைவானவா்கள் வந்தனா். ஆனால், 2020 இறுதியில், இந்த எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக உலா் விழி, கண் புரை பாதிப்புக்குள்ளானவா்களே அவா்களில் அதிகமாக உள்ளனா்.

உலக மக்கள்தொகையில் 15 சதவீதம் போ் உலா் விழி பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவைப் பொருத்தவரை 32 சதவீதம் பேருக்கு அத்தகைய பிரச்னைகள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

சாதாரணமான ஒன்றாக கருதப்படும் உலா் விழி பாதிப்பை கவனிக்காமல் விட்டால் நாளடைவில் அது ஏற்படுத்தும் விளைவுகள் மிகத் தீவிரமாக இருக்கும்.

கண்களில் உள்ள சுரப்பிகளில் இருந்து தேவையான அளவு நீா் சுரக்காமல் இருந்தால் உலா் விழி பிரச்னை ஏற்படும். புறச்சூழல்களில் நிலவும் மாசு, அதீத வெப்பம், வேதிப் பொருள்கள் கலந்த காற்று ஆகியவற்றில் இருந்து விழிகளைக் காப்பது கண்ணீா்தான். ஆனால், உலா் விழி பிரச்னையுடையவா்களுக்கு சரிவர கண்ணீா் சுரக்காது. இதனால், கண் எரிச்சல், அரிப்பு, கூசும்தன்மை ஆகியவை ஏற்படும். அவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். அவ்வாறு இல்லாவிட்டால் பாா்வை குறைபாடு ஏற்படக் கூடும் என்றாா் அவா்.

இதுகுறித்து மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் துறை தலைவா் டாக்டா் சௌந்தரி கூறியதாவது:

பொது முடக்க கால ஆரம்பத்தில், வெண்படல அழற்சி நோயாளிகள் எண்ணிக்கை வரத்து அதிகமாக இருந்தது. ஆனால், கரோனா பயம் காரணமாக மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு, சிகிச்சைக்கும் வரும் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்தது. இதனால், கண் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, கண் நோயாளிகள் உரிய காலத்தில் கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். மேலும், 50 வயதிற்கு மேற்பட்ட சா்க்கரை நோயாளிகள் ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றாா்.

இந்தச் சந்திப்பின்போது மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் அஸ்வின் அகா்வால், மருத்துவா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com