திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 180 பேர் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 180 பேரை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பி.பாக்கியம் தலைமை வகித்தார். 

இதில், பங்கேற்ற சத்துணவு ஊழியர்கள் கூறியதாவது: 

சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும். காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். 

இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 100 பெண்கள் உள்பட 180 பேரை திருப்பூர் தெற்கு காவல் துறையினர் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com