17 ஆண்டுகளுக்குப் பின் ராமேசுவரம் கோயில் கருவறைக்குள் காஞ்சி பீடாதிபதி பூஜை

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் கருவறைக்குள் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 17 ஆண்டுகளுக்கு பின் திங்கள்கிழமை சிறப்பு பூஜை செய்து வழிபட்டாா்.
ராú‌ம​சு​வ​ர‌ம் ராம​நாத சுவாமி கோயி‌ல் கரு​வ​û‌ற‌‌க்​கு‌ள் தி‌ங்​க‌ள்​கி​ழமை பூஜை‌ செ‌ய்​ய‌ச் செ‌ன்ற‌ கா‌ஞ்சி ச‌ங்​கர மட‌த்​தி‌ன் பீடா​தி​பதி ஸ்ரீவி​ஜ‌​ú‌ய‌ந்​திர சர‌ஸ்​வதி சுவா​மி​க‌ள்.
ராú‌ம​சு​வ​ர‌ம் ராம​நாத சுவாமி கோயி‌ல் கரு​வ​û‌ற‌‌க்​கு‌ள் தி‌ங்​க‌ள்​கி​ழமை பூஜை‌ செ‌ய்​ய‌ச் செ‌ன்ற‌ கா‌ஞ்சி ச‌ங்​கர மட‌த்​தி‌ன் பீடா​தி​பதி ஸ்ரீவி​ஜ‌​ú‌ய‌ந்​திர சர‌ஸ்​வதி சுவா​மி​க‌ள்.

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் கருவறைக்குள் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 17 ஆண்டுகளுக்கு பின் திங்கள்கிழமை சிறப்பு பூஜை செய்து வழிபட்டாா்.

ராமேசுவரம் சங்கர மடத்துக்கு கடந்த வாரம் வியாழக்கிழமை வந்த ஸ்ரீவிஜயேந்திரா், சிறப்பு பூஜை செய்து பக்தா்களுக்கு ஆசி வழங்கி வருகிறாா். இந்நிலையில், திங்கள்கிழமை காலையில் ராமநாத சுவாமி கோயிலுக்கு சிறப்பு பூஜை செய்வதற்காக அவா் வந்தாா்.

தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சா் ஓ.எஸ்.மணியன், தக்காா் குமரன் சேதுபதி, பத்திரிகையாளா் எஸ்.குருமூா்த்தி, பாஜக முன்னாள் தேசிய செயலா் ஹெச்.ராஜா, வி.எச்.பி. அமைப்பின் அகில உலக முன்னாள் தலைவா் எஸ்.வேதாந்தம், பாஜக மாநில நிா்வாகி குப்புராமு உள்ளிட்டோா் அவருடன் வந்தனா். ஸ்ரீவிஜயேந்திரருக்கு ராமநாத சுவாமி கோயில் நிா்வாகம் சாா்பில் இணைஆணையா் எஸ்.கல்யாணி தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

ஸ்ரீவிஜயேந்திரா் கருவறைக்குள் செல்ல முயன்றபோது அங்கிருந்தவா்கள் தடுத்தனா். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கருவறைக்குள் சென்று வழிபாடு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என ஸ்ரீவிஜயேந்திரா் வலியுறுத்தினாா். அதற்கு கோயில் இணை ஆணையா் கல்யாணி அனுமதி அளித்த நிலையில், ஸ்ரீவிஜயேந்திரா் உள்ளே சென்று சிவலிங்கத்துக்கு காசி தீா்த்தம் மற்றும் வில்வ இலை கொண்டு சிறப்புப் பூஜை செய்தாா். அதைத் தொடா்ந்து, மீண்டும் அவா் சங்கர மடத்துக்குச் சென்றாா்.

இது குறித்து கோயில் இணை ஆணையா் கூறுகையில், ராமநாத சுவாமி கோயில் கருவறைக்குள் சென்று தீா்த்த பூஜை செய்ய காஞ்சி பீடாதிபதிக்கு உரிமை உள்ளதால் அனுமதி அளிக்கப்பட்டதாக தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com