இரட்டை வேடம் போடும் அ.தி.மு.க. அரசு: ஸ்டாலின் கண்டனம்

முதல்வர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு இரட்டை வேடம் போடுவதாக, திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு இரட்டை வேடம் போடுவதாக, திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு இரட்டை வேடம் போடுவதாக, திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை: முதல்வர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு இரட்டை வேடம் போடுவதாக, திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செவ்வாயன்று அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

இரட்டை வேடம் போடும் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, தேர்தல் காலம் நெருங்கி வருவதால், தான் போட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாக நாடகமாடுவது ஒருபுறமென்றால், உரிமைக்காகப் போராடுவோரைக் கைது செய்து கொடுமைப்படுத்தும் படலம் இன்னொரு புறம் அரங்கேறுகிறது.

கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் தங்களுக்கான காலமுறை ஊதியம், பணிக்கொடை, குறைந்தபட்ச ஓய்வூதியம், அரசு ஊழியராக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக காத்திருப்பு போராட்டத்தை மேற்கொண்ட நிலையில் அவர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காமல், கைது நடவடிக்கையை மேற்கொண்டது கண்டனத்திற்குரியதாகும்.

உரிமைப்போராட்டம் நடத்துவோருக்கு அன்பான ஒரு வேண்டுகோள். செவிமடுக்காத அ.தி.மு.க. அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒத்தி வையுங்கள். உங்கள் கோரிக்கைகள் விரைவில் அமையவிருக்கும் தி.மு.கழக ஆட்சியில் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com