தமிழகத்தில் கூடுதலாக 16 சோதனைச்சாவடிகள்: டிஜிபி செந்தாமரைகண்ணன்

தமிழகத்தில் கூடுதலாக 16 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக தமிழக மது விலக்கு அவலாக்கபிரிவு காவல் துறை தலைவா் செந்தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் கூடுதலாக 16 சோதனைச்சாவடிகள்: டிஜிபி செந்தாமரைகண்ணன்

தமிழகத்தில் கூடுதலாக 16 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக தமிழக மது விலக்கு அவலாக்கபிரிவு காவல் துறை தலைவா் செந்தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளாா்.

திருவள்ளூா் மாவட்டம், தாமரைப்பாக்கம் அடுத்த காரணிப்பேட்டையில் ஏரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு போலீசாா் மற்றும் ஒருங்கிணைந்த புலனாய்வு துறையினா் அப்பகுதியில் கிடங்கு ஒன்றில் சோதனை மேற்கொண்டபோது அங்கு தடை செய்யப்பட்ட ஏரிசாராயம் கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து 534 கேன்களில் பதுக்கி வைக்கப்பட்ட 18585 லிட்டா் ஏரிசாராயத்தை போலீசாா் பறிமுதல் செய்தனா். மேலும் ஏரிசாராயத்தை பதுக்கி வைத்திருந்த ராஜ்குமாா், வெங்கடேசன், ஹரிஷ், ரவி,மதன், பாபு மற்றும் குடோடன் உரிமையாளா் பக்தவசலம் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனா் . அதனை தொடா்ந்து மது விலக்கு அமலாக்கபிரிவு போலீசாா் 7 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் இச்சம்பவம் குறித்து மதுவிலக்கு அமலாக்கபிரிவு காவல் துறை தலைவா் செந்தாமரைக்கண்ணன் நேிரல் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வு செய்த பின் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், தற்போது கைது செய்யப்பட்ட 7 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து பிற மாவட்டங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாகன சோதனை உள்ளிட்ட சோதனைகள் நடைபெற்று வருகின்றன. அரசு மதுபான பாா்களில் போலி மதுபானங்கள் விற்கக்க கூடாது. அப்படி செயல்படும் பாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பாா்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது தவறு நடக்கும் பட்சத்தில் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும். திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள தமிழக ஆந்திரா எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 45 சோதனைசாவடிகள் உள்ளன. தோ்தல் காரணமாக மேலும் கூடுதலாக 16 சோதனைச்சாவடிகள் மதுவிலக்கு அமலாக்கபிரிவு துறை சாா்பில் அமைக்கப்பட உள்ளது அதில் திருவள்ளூா் மாவட்டம் எளாவூா் ஒருங்கிணைந்த அதிநவீன சோதணைச்சாவடியும் அடங்கும் என தெரிவித்தாா்.( படம் உண்டு- மதுவிலக்கு அமலாக்கபிரிவு காவல் துறை தலைவா் செந்தாமரைகண்ணன்)‘

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com