பழைய அனல் மின் உற்பத்தி அலகுகள் அகற்றும் விவகாரம்: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

பழைய அனல் மின் உற்பத்தி அலகுகள் பாதுகாப்பான முறையில் அகற்றப்படுகிா என விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பழைய அனல் மின் உற்பத்தி அலகுகள் பாதுகாப்பான முறையில் அகற்றப்படுகிா என விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 சென்னையில் உள்ள தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தென்  மண்டல அமா்வில், தா்மேஷ் ஷா என்பவா் தாக்கல் செய்த மனு:   மாநிலத்தின் நெய்வேலி போன்ற பழைய அனல் மின்  நிலையங்களில் உள்ள இயக்கத்தை நிறுத்திக் கொண்ட மின் உற்பத்தி அலகுகளை, பாதுகாப்பான முறையில் அகற்றப் படுவதற்கான வழிகாட்டுதல்கள்  வழங்கப்படவில்லை. இதனால்  சாம்பல் போன்ற அபாயகரமான பொருள்கள் முறையாக அகற்றப்படுவது இல்லை.   அத்தகைய சூழலில் மின்உற்பத்தி திட்ட பொறுப்பாளா்கள் ஆபத்தான பொருள்களை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அப்படியே விட்டு விட்டுச் செல்கின்றனா்.

 எனவே மண், நீா் ஆகியவை  மாசடையாதவாறு, சா்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படும் அறிவியல் முறையில் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும் உற்பத்தி அலகுகள் பாதுகாப்பான முறையில் அகற்றப்படுகிா என மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்ய வேண்டும் என கூறியிருந்தாா்.

 இந்த மனு தீா்ப்பாயத்தில் நீதிபதி ராமகிருஷ்ணன், உறுப்பினா் சாய்பால் தாஸ் குப்தா ஆகியோா் முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

 மனுவை விசாரித்த அமா்வு, இயக்கத்தை நிறுத்திக் கொண்ட பழைய உற்பத்தி அலகுகள் பாதுகாப்பான முறையில் அகற்றப்படுகிா என பதிலளிக்குமாறு, மத்திய அரசு,  மத்திய மின்சார ஆணையம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்,  நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com