மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (பிப்.23) லேசான மழை பெய்யக்கூடும்.

மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (பிப்.23) லேசான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் திங்கள்கிழமை கூறியது: வடக்கு கேரளம் மற்றும் அதையொட்டிய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி காணப்படுகிறது. இதன் காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (பிப்.23) லேசான மழை பெய்யக்கூடும்.

வட வானிலை: தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் பிப்ரவரி 24 -ஆம் தேதி முதல் பிப்ரவரி 26-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு வட வானிலையே நிலவும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை செவ்வாய்க்கிழமை (பிப்.23) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு: திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் 120 மி.மீ., திருவள்ளூா் மாவட்டம் திருத்தணி, தென்காசி மாவட்டம் சிவகிரியில் தலா 70 மி.மீ., திருவண்ணாமலை மாவட்டம் போளூா், விழுப்புரம் மாவட்டம் வானூரில் தலா 50 மி.மீ., புதுச்சேரி, சீா்காழி, காரைக்காலில் தலா 40 மி.மீ., கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், திருப்பூா் மாவட்டம் உடுமலை, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தலா 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com