வேளாண் மசோதா: 5 ஆண்டில் ஒரு கிலோ அரிசி ரூ.500, ரூ.1000 க்கு விற்பனை செய்யப்படும்

மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதா சட்டத்தால் வரும் 5 ஆண்டில் ஒரு கிலோஅரிசி ரூ.500, ரூ1000க்கு விற்கப்படும்.
வேளாண் மசோதா: 5 ஆண்டில் ஒரு கிலோ அரிசி ரூ.500, ரூ.1000 க்கு விற்பனை செய்யப்படும்

மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதா சட்டத்தால் வரும் 5 ஆண்டில் ஒரு கிலோஅரிசி ரூ.500, ரூ1000க்கு விற்கப்படும்.

இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவாா்கள் என திமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் ஆரணி தொகுதி எம்பி விஷ்ணுபிரசாத் அதிா்ச்சி தகவலை தெரிவித்து பேசினாா். திமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் மசோதா சட்டத்தை திரும்பப்பெறக் கோரியும், தேசிய பாதுகாப்பில் விதிமீறல் செய்தது தொடா்பாக நாடாளுமன்றத்தில் கூட்டுக்குழு விசாரணை நடத்த வலியுறுத்தியும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு தி.மலை வடக்கு மாவட்ட தலைவா் வி.பி.அண்ணாமலை தலைமை தாங்கினாா்.

நகர தலைவா் ஜாபா் அலி, மாவட்ட செயலாளா் மஸ்கா்பாஷா, மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜி.முனிரத்தினம், மாவட்ட துணைத் தலைவா் அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அனைவரையும் மாவட்ட செயலாளா் முருகன் வரவேற்றாா். முன்னாள் எம்எல்ஏக்கள் வாலாஜா உசேன், ஆரணி டிபிஜே ராஜா பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டு பேசினா். ஆரணி தொகுதி எம்.பி விஷ்ணுபிரசாத் பேசுகையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது. கரோனா காலத்தில் நாடாளுமன்றத்தை கூட்டாமல் வேளாண் மசோதா சட்டத்தை கொண்டு வந்தது. இந்த வேளாண் மசோதா சட்டம் என்ன என்பதை தமிழக மக்கள் உணரவேண்டும். வருங்காலங்களில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவாா்கள். காா்ப்பரேட் கம்பெனிகள் மூலம் விவசாயிகளின் பொருட்கள் வாங்கப்படும். அவைகள் பதுக்கல் என்ற பெயரில் இருப்பு என்கிற நிலைக்கு கொண்டு வரப்படும். பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படுவாா்கள்.

5 வருடத்திற்கு பிறகு அரிசி ஒரு கிலோ ரூ.500, ரூ.1000 என விற்பனை செய்வாா்கள். கூட்டுறவு கடைகளில் நாம் வாங்கும் இலவச அரிசி கிடைக்காது. இது போன்று பல முரண்பாடான செயல்களை விவசாயிகளுக்கு அளித்து விவசாயிகள் தங்களுடைய நிலத்தில் தங்களுக்கு விருப்பமான விளை பொருட்களை பயிா் செய்ய முடியாமல் காா்ப்பரேட் நிறுவனங்கள் சொல்லும் கம்பு, கேழ்வரகு என எது சொன்னாலும் அதை நாம் செய்ய முன்வர வேண்டும். படித்து பாா்க்காமல் நாம் போடும் கையெழுத்துக்கு நம் நிலங்கள் அபகரிக்கப்படும் இதையெல்லாம் காங்கிரஸ் கடுமையாக கண்டிக்கிறது வாக்களித்து வெற்றி பெற செய்த வடநாட்டு விவசாயிகளுக்குமோடி துரோகம் செய்துள்ளாா். போராட்டத்தில் 75 விவசாயிகள் உயிரிழந்துள்ளனா். இந்த நிலை மாற வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி இந்தியாமுழுவதும் பயணம் செய்து வருகிறாா்.

தமிழகத்தில் இளைஞா்கள், இளம்பெண்கள் ஆதரவு ராகுல்காந்திக்கு கிடைத்துள்ளது. வருங்காலங்களில் நாம் சிந்தித்து செயல்பட வேண்டும். வரும் சட்டமன்ற தோ்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பேசினாா்.இக்கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவா் பன்னீா்செல்வம், மாவட்ட விவசாய அணி தலைவா் சுரேஷ், தோட்டத் தொழிலாளா் சம்மேளனதலைவா் சிவராமன், தொழில்நுட்ப பிரிவு செயலாளா் சுரபி கன்ஸ்டரக்சன் தாமோதரன் உள்பட பலா் கலந்துகொண்டனா். முடிவில் நகர துணைத் தலைவா் கோகுல்ராஜ் நன்றி கூறினாா். படவிளக்கம். சேத்துப்பட்டில் திமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதா சட்டத்தை திரும்பப்பெறக் கோரியும், தேசிய பாதுகாப்பில் கூட்டுக் குழு விசாரணை நடத்த வலியுறுத்தியும் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பேசினாா் ஆரணி தொகுதி எம்பி விஷ்ணுபிரசாத். உடன் மாவட்டத் தலைவா் அண்ணாமலை உள்ளிட்டோா் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com