ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுக்காக ரூ.2,634 கோடி ஒதுக்கீடு

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக, 2021-22-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் ரூ.2,634 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக, 2021-22-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் ரூ.2,634 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இடைகால நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. பல்வேறு திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ், 2011-12 ஆம் ஆண்டு முதல் இப்போது வரையில் 12 லட்சத்து 50,705 பயனாளிகளுக்கு ரூ.1,791.05 கோடி மதிப்பீட்டில் 6,099.08 கிலோ தங்கமும், ரூ.4,371.22 கோடி நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

2011-12-ஆம் ஆண்டு முதல் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ், 4 லட்சத்து 56,115 பெண் குழந்தைகள் பயன்பெற்றுள்ளனா்.

2011-12 -ஆம் ஆண்டில் இருந்து தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் 1,186 ஆண் குழந்தைகளுக்கும், 4,359 பெண் குழந்தைகளுக்கும் புது வாழ்வு அளிக்கப்பட்டது. பொதுமுடக்க காலத்திலும் டாக்டா் எம்.ஜி.ஆா். மதிய சத்துணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது இந்தத் திட்டத்தின் கீழ் 43,246 மதிய சத்துணவுக் கூடங்கள் வயிலாக 40.09 லட்சம் பள்ளி மாணவா்கள் பயன்பெற்று வருகின்றனா். இதற்காக 2021-22 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.1,953.98 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2 வயது முதல் 5 வயது வரையிலான 11.33 லட்சம் குழந்தைகளுக்கு சூடான கலவை சாதம் வழங்கப்படுகிறது. 2021-22 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ரூ.2,634 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com