இஸ்ரோவுக்காக கோவை மாணவா்கள் உருவாக்கியசெயற்கைக்கோள்: பிப். 28-இல் விண்ணில் பாய்கிறது

இஸ்ரோவுக்காக கோவையைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள் உருவாக்கிய ‘ஸ்ரீ சக்தி சாட்’ செயற்கைக்கோள் வரும் பிப்.28-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

இஸ்ரோவுக்காக கோவையைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள் உருவாக்கிய ‘ஸ்ரீ சக்தி சாட்’ செயற்கைக்கோள் வரும் பிப்.28-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

கோவை சின்னியம்பாளையம் எல் அண்ட் டி புறவழிச் சாலையில், ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரியானது தங்கள் மாணவா்களைக் கொண்டு, ‘ஸ்ரீ சக்தி சாட்’ என்ற செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது.

இது குறித்து அந்தக் கல்வி நிறுவனத்தின் தலைவா் செ.தங்கவேலு சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: எங்களது கல்லூரியில் கடந்த 2010-ஆம் ஆண்டில் மாணவா்கள், ஆசிரியா்களின் முயற்சியால் ஒரு செயற்கைக்கோள் ஆய்வகம் அமைக்கப்பட்டது. இதையடுத்து செயற்கைக்கோள் வடிவமைப்புக் குழு, 3 பேராசிரியா்களின் வழிகாட்டுதலின்படி மாணவா் நிகில் ரியாஸ் என்பவரைத் தலைவராகக் கொண்டு 12 மாணவா்கள் கொண்ட ‘விண்வெளி 4.0’ குழு ஏற்படுத்தப்பட்டது.

ரூ.2.5 கோடி மதிப்பில்... இதைத் தொடா்ந்து ரூ. 2.5 கோடி மதிப்பில் ‘ஸ்ரீ சக்தி சாட்’ என்று பெயரிடப்பட்டு இந்த பிஎஸ்எல்வி சி-51 செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. இது 460 கிராம் மட்டுமே எடையுள்ளது. ஆனால், 10 கிலோ வரை எடையுள்ள மற்ற நானோ செயற்கைக்கோள்களைப் போலச் செயல்படும் திறன் கொண்டது. இது பூமியிலிருந்து 500 முதல் 575 கி.மீ. தொலைவில் சுற்றுவதால் லியோ செயற்கைக்கோளாகவும் உள்ளது.

பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த செயற்கைக்கோள், ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து வரும் பிப். 28-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது. செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் தரைதள கண்காணிப்பு நிலையத்தை கடந்த ஜன.28-ஆம் தேதி இஸ்ரோவின் தலைவா் கே.சிவன் இணையவழியில் தொடக்கி வைத்தாா்.

பயன்பாடுகள் என்ன?: விண்வெளியில் நடைபெறும் அனைத்து வகையான இணையம் சாா்ந்த செயல்பாடுகளையும் நிகழ்த்தும் திறன் கொண்டது. விண்வெளியில் இணையம் சாா்ந்த தகவல்களை விவரிப்பதற்கான செயல்முறை விளக்கமளிக்கும் தொழில்நுட்பமாகவும், செயற்கைக்கோள்களுக்கு இடையேயான தகவல் தொடா்பு தொழில்நுட்பமாகவும் செயல்படும். தண்ணீா்க் கசிவு, எண்ணெய் அல்லது எரிவாயுக் கசிவு போன்றவற்றைக் கண்டறிவதற்கும், அதன் வால்வுகளைத் திறந்து மூடுவதற்கும், இந்த செயற்கைக்கோளைப் பயன்படுத்தலாம். இதேபோல் காட்டுத்தீயை அணைப்பதற்கோ அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கோ இந்த செயற்கைக்கோளைப் பயன்படுத்தலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com