
இந்திய ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மாற்றத்திற்கான முதன்மை அணியாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியும், இந்திய ஜனநாயகக் கட்சியும் கூட்டாக சேர்ந்து 2021 – சட்டமன்ற பொதுத்தேர்தலை சந்திக்கவிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவும், தமிழக மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவும், தமிழகத்தை இந்திய அளவில் முதன்மை மாநிலமாக முன்னேற்றுவதற்காகவும் இந்த கூட்டணி மாற்றத்திற்கான முதன்மை அணியாக செயல்படும்.
மக்கள் நலனை பிரதானமாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் இந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக மக்கள் உயர்வுக்கு அடித்தளமாக அமையும் என கருதுகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதன்மூலம் அதிமுக கூட்டணியில் இருந்து சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சியும், திமுக கூட்டணியில் இருந்து இந்திய ஜனநாயக கட்சியும் வெளியேறியுள்ளன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...