தொகுதிகளைக் குறைத்தே பெற்றுள்ளோம்: அன்புமணி

​வன்னியர்களுக்குத் தனி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால், அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தொகுதிகளைக் குறைத்தே பெற்றுள்ளதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


வன்னியர்களுக்குத் தனி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால், அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தொகுதிகளைக் குறைத்தே பெற்றுள்ளதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, பாமக இடையிலான தொகுதிப் பங்கீடு சனிக்கிழமை இறுதி செய்யப்பட்டது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அன்புமணி பேசியது:

"அதிமுகவுக்கும், பாமகவுக்கும் இடையே தேர்தல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் சேர்ந்து பாமக போட்டியிடும். எங்கள் கூட்டணி நிச்சயம் மிகப் பெரிய வெற்றி பெறும்.

இந்தத் தேர்தலைப் பொறுத்த வரை எங்களுடைய நோக்கம், கோரிக்கை எல்லாம் வன்னியர்களுக்குத் தனியாக இடஒதுக்கீடு வேண்டும் என்பதே. அரசாங்கம் அதை நிறைவேற்றி உறுதிப்படுத்தியிருக்கிறது. 

அதனால் இந்தத் தேர்தலில் நாங்கள் போட்டியிடுகின்ற சட்டப்பேரவைத் தொகுதிகள் எண்ணிக்கையைக் குறைத்தே பெற்றிருக்கிறோம். ஆனாலும், எங்களது பலம் குறையப்போவதில்லை. நிச்சயம் இந்தத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்வராவார்" என்றார் அன்புமணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com