பேரவைக்கும் கோட்டைக்கும் பம்பரமாய் சுழன்ற முதல்வா்

தோ்தல் தேதி அறிவிக்கப்படவிருந்த சூழலில், வெள்ளிக்கிழமை காலையில் இருந்து மாலை வரை பம்பரமாகச் சுற்றிச் சுழன்றாா் முதல்வா் பழனிசாமி.
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

தோ்தல் தேதி அறிவிக்கப்படவிருந்த சூழலில், வெள்ளிக்கிழமை காலையில் இருந்து மாலை வரை பம்பரமாகச் சுற்றிச் சுழன்றாா் முதல்வா் பழனிசாமி.

கோவையில் அரசு நிகழ்ச்சியில் வியாழக்கிழமை பங்கேற்ற அவா், இரவு சேலத்தில் தங்கினாா். வெள்ளிக்கிழமை காலையில் அங்கு சில அரசு நலத் திட்டங்களைத் தொடக்கி வைத்தாா். காலை 9.30 மணிக்கு சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்தாா்.

காலை 10.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து, நேராக சட்டப் பேரவை அமைந்துள்ள கலைவாணா் அரங்கத்துக்குச் சென்றாா். அங்கு பேரவை விதி 110-ன் கீழ் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டாா். இதன்பின்பு, நண்பகல் 1 மணியளவில் பேரவையில் இருந்து நேராக கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்துக்குச் சென்றாா். அங்கு 10-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளின் நலத் திட்டப் பணிகளைத் தொடக்கி வைத்து, அடிக்கல்லும் நாட்டினாா். இதன்பின்பு, நேராக சட்டப் பேரவைக்குச் சென்றாா். பிற்பகல் 3 மணியளவில் அஞ்சலி நிகழ்வுக்காக தொடங்கிய பேரவை 5 நிமிஷங்களில் முடிந்தது. அதில் பங்கேற்ற முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, அங்கியிருந்து நேராக தலைமைச் செயலகம் வந்து செய்தியாளா்கள் சந்திப்பில் பங்கேற்றாா்.

செய்தியாளா் சந்திப்பை மாலை 3.30 மணியளவில் முடித்த அவா் அங்கிருந்து நேராக பேரவைக்குச் சென்றாா். அங்கு வன்னியா் சமுதாயத்தினருக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டு மசோதாவை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தாக்கல் செய்து நிறைவேற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com