மக்களை கேட்டு தேர்தல் அறிக்கை: பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மக்களின் கருத்துகளை கேட்டு பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் என அக்கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
பாஜக தலைவர் எல்,முருகன்
பாஜக தலைவர் எல்,முருகன்


மதுரை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மக்களின் கருத்துகளை கேட்டு பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் என அக்கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

சென்னையில் இருந்து மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: தை முதல் நாளான பொங்கலன்று 10 லட்சம் உறுப்பினர்களை பாஜகவில் சேர்க்கும் பிரசாரம் செய்ய உள்ளோம்.

தமிழக பேரவைத் தேர்தலுக்கு மக்களின் கருத்துகளை கேட்டு தேர்தல் அறிக்கை தயார் செய்ய உள்ளோம். அது பாஜகவின் தேர்தல் அறிக்கையாக இருக்கும். 

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என கூறிவிட்டார் அவர் எங்களுக்கு ஆதரவு கொடுத்தால் வரவேற்போம். மத்திய அரசு அஞ்சல் துறை தேர்வில் தமிழை கட்டாயம் சேர்ப்பார்கள்.

கல்பாக்கம் அணுமின் நிலைய அலுவலக பணியாளர்களுக்கான தேர்வு மும்பையில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் தேர்வு மையம் அமைக்க கோரிக்கை வைக்கப்படும். அதிமுகவிடம் சட்டப்பேரவைத் தேர்தலில் 40 இடங்கள் கேட்டு எந்த நிர்பந்தமும் நாங்கள் செய்யவில்லை என்று முருகன் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com