ஓமலூர் அருகே பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்களுக்கு ரூ. 5 லட்சம் பொங்கல் போனஸ்

ஓமலூர் அருகே நச்சுவாயனூர் பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்களுக்கு ரூ.5 லட்சம் பொங்கல் போனசாக வழங்கப்பட்டது.
ஓமலூர் அருகே நச்சுவாயனூர் பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்களுக்கு பொங்கல்  போனஸ் வழங்கிய பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் மாது.
ஓமலூர் அருகே நச்சுவாயனூர் பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்களுக்கு பொங்கல்  போனஸ் வழங்கிய பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் மாது.

ஓமலூர் அருகே நச்சுவாயனூர் பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்களுக்கு ரூ.5 லட்சம் பொங்கல் போனசாக வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள நச்சுவாயனூர் பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்பட்டது. இந்த நச்சுவாயனூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் 800 நபர்களுக்கு மேல் உறுப்பினராக இருந்து வரும் நிலையில் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் லிட்டருக்கு மேல் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்படி உற்பத்தி செய்யும் பாலானது தமிழக அரசுக்கு சொந்தமான சேலம் ஆவின் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது. 

மேலும் இந்த சங்கமானது கடந்த 30 வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில் உற்பத்தியாளர் சங்கத்தில் ஒரு வருடம் கூட நஷ்டம் ஏற்படாமல் லாபத்தில் இயங்கி வருகிறது. இந்த லாபத்தை வருடாவருடம் பால் ஊற்றும் விவசாயிகளுக்கு பங்கிட்டு கொடுப்பது வழக்கம். 

இதன் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் மாது பொங்கல் போனஸை பால் உற்பத்தி விவசாயிகளுக்கு வழங்கினார். 

போனஸ் பணத்தை பெற்றுக்கொண்ட உறுப்பினர்கள் பொங்கல் போனஸ் வழங்கிய சங்க நிர்வாகத்திற்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிகழ்ச்சியில் நச்சுவாயனூர் பால் உற்பத்தியாளர் சங்கத்தலைவர் மாது நிர்வாகக்குழு உறுப்பினர் பழனிசாமி, செயலாளர் மனோகரன், சுரேஷ், கந்தசாமி, ரித்தீஷ் , பூபதி, கிருஷ்ணவேணி, சுந்தரராஜன், பாலு, பழனிச்சாமி உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com