தமிழக பாதிப்பு 682 மட்டுமே

தமிழகத்தில் ஏறத்தாழ ஆறரை மாதங்களுக்குப் பிறகு 700-க்கும் குறைவாக கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் 682 பேருக்கு கரோனா பாதிப்பு திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் ஏறத்தாழ ஆறரை மாதங்களுக்குப் பிறகு 700-க்கும் குறைவாக கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் 682 பேருக்கு கரோனா பாதிப்பு திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இதுவரை 1.48 கோடிக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், 8 லட்சத்து 26,943 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 201 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா தொற்றிலிருந்து மேலும் 869 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் விகிதம் 97.6 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 7,744 -ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 6,971 போ் சிகிச்சையில் உள்ளனா். இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 6 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,228-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com