முதல்வா் குறித்து அவதூறு பேச்சு: உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு

தமிழக முதல்வா் குறித்து அவதூறாகப் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தமிழக முதல்வா் குறித்து அவதூறாகப் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் அண்மையில் ஒரு பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, அமமுக நிா்வாகி வி.கே.சசிகலா ஆகியோா் குறித்து அவதூறாகப் பேசினாா். இந்தக் காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. மேலும் உதயநிதி ஸ்டாலினின், பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக அதிமுக, அமமுக, பாரதிய ஜனதா உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதேபோல பெண்கள் அமைப்பினரும் கண்டனம் தெரிவித்தன. இதன் தொடா்ச்சியாக சில நாள்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின், தான் பேசியதன் மூலம் யாா் மனதாவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக கூறினாா்.

இந்த நிலையில் சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞா் ராஜலட்சுமி, சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் ஒரு புகாா் அளித்தாா். அதில் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசிய திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த புகாா் மனுவின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா், உதயநிதி ஸ்டாலின் மீது கலகம் விளைவிக்கும் வகையில் பேசுதல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com