மன்னார்குடியில் விவசாயிகள் சங்கத்தினர் வேளாண் சட்ட நகலை எரித்து ஆர்ப்பாட்டம்

மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேளாண் திருத்தச் சட்டத்தின் நகல் எரிப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மன்னார்குடியில் விவசாயிகள் சங்கத்தினர் வேளாண் சட்ட நகலை எரித்து ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விவசாயச் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் சார்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் திருத்தச் சட்டத்தின் நகல் எரிப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மன்னார்குடி பேருந்து நிலையம் அருகேயுள்ள முன்னாள் அமைச்சர் மன்னை ப.நாராயணசாமி சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஐ நகர விவசாயச் சங்க செயலர் வி.எம்.கலியபெருமாள், சிபிஎம் விவசாயச் சங்க நகரச் செயலர் ஜி.மாரிமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர்.

விவசாயச் சங்க ஒன்றிய தலைவர் ஜெயபால், ஏ. ராஜேந்திரன், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய செயலர் கே.டி.கந்தசாமி, ஆர்.சதாசிவம் முன்னிலை வகித்தார். மத்திய அரசு சட்டம் நிறைவேற்றி நடை முறைப்படுத்தியுள்ள புதிய மூன்று வேளாண் திருத்தச் சட்ட நகல்களை தீயிட்டு எரித்தும் உடனடியாக அதனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கைகளை வலியுறுத்திக் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்ட நகலைக் கொழுத்தும் போது, அங்குப் பாதுகாப்புக்கு இருந்த மன்னார்குடி காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட போலீஸார் நகல் எரிப்பதைத் தடுத்து தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதனால், சிறிது நேரம் இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போராட்டத்தில், சிபிஐ மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் வை.செல்வராஜ் , நகரச் செயலர் வீ.கலைச்செல்வம், இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலர் துரை, அருள்ராஜன், சிபிஎம் நகரச் செயலர் ஜி.ரெகுபதி, மாவட்டக் குழு உறுப்பினர் த.ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com