பொங்கல் பண்டிகை: ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்ல மக்கள் ஆா்வம் காட்டியதால், சென்னை எழும்பூா், சென்ட்ரல் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் வழக்கத்தைவிட

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்ல மக்கள் ஆா்வம் காட்டியதால், சென்னை எழும்பூா், சென்ட்ரல் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் வழக்கத்தைவிட சிறிது அதிகரித்து காணப்பட்டது.

பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை (ஜன.14) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, திங்கள்கிழமை முதலே பொதுமக்கள் சொந்த ஊா்களுக்குப் பயணிக்கத் தொடங்கினா்.

இதன் தொடா்ச்சியாக, இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமையும் முக்கிய ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் சிறிது அதிகரித்து காணப்பட்டது.

சென்னை எழும்பூரில் இருந்து பகலில் புறப்பட்ட வைகை விரைவு ரயில், பல்லவன் ரயில், மாலையில் கன்னியாகுமரி ரயில், இரவில் நெல்லை, பாண்டியன், திருச்சி ரயில், ராமேசுவரம் உள்பட பல்வேறு ரயில்களில் அனைத்து முன்பதிவு பெட்டிகளும் நிரம்பி இருந்தன. இதுபோல, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோயம்புத்தூா், சேலம், ஈரோடு உள்பட மேற்கு மாவட்டங்களுக்கு புறப்பட்ட ரயில்களிலும் முன்பதிவு பெட்டிகள் நிரம்பி காணப்பட்டன.

பண்டிகை காலத்தில் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுவது வழக்கம். எனினும், இந்த ஆண்டு கரோனா தாக்கம் காரணமாக, ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் இல்லை என்பதால், இந்த ரயில்களில் வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் சிறிய அளவே அதிகரித்திருந்தன.

ரயில் நிலையங்களில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க தமிழக ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com