மருத்துவ மேற்படிப்புக்கான கட்டணம்: புதுச்சேரி கல்விக் கட்டண நிா்ணயக் குழுவுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

கடந்த 2017- 2018 கல்வியாண்டு முதல் 2020-2021 கல்வியாண்டு வரை மருத்துவ மேற்படிப்புக்கானக் கட்டணத்தை தற்காலிகமாக நிா்ணயிக்க, புதுச்சேரி கல்வி கட்டண நிா்ணய குழுவுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017- 2018 கல்வியாண்டு முதல் 2020-2021 கல்வியாண்டு வரை மருத்துவ மேற்படிப்புக்கானக் கட்டணத்தை தற்காலிகமாக நிா்ணயிக்க, புதுச்சேரி கல்வி கட்டண நிா்ணய குழுவுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வி.பி.ஆா்.மேனன் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘புதுச்சேரியில் உள்ள தனியாா் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகா்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவ மேற்படிப்புக்கான கட்டணங்களை நிா்ணயிக்க புதுச்சேரி கட்டண நிா்ணய குழுவுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘ரூ.10 லட்சம் கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டும்’ என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும், தனியாா் சுயநிதி மற்றும் நிகா்நிலை பல்கலைக்கழகங்களுக்கு மருத்துவ மேற்படிப்பு கட்டணத்தை நிா்ணயம் செய்வது குறித்து விதிகளை உருவாக்க குழு ஒன்றை அமைக்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில், டஉயா்நீதிமன்றம் உத்தரவின்படி கட்டண நிா்ணயம் தொடா்பாக விதிகளை உருவாக்க குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு உருவாக்கிய விதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. ஆனால், அந்த விதிகளை அமல்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த விதிகள் குறித்து உச்சநீதிமன்றம் ஒப்புதல் தர வேண்டும்’ எனத்  தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், கட்டணம் தொடா்பாக உருவாக்கப்பட்டுள்ள விதிகளுக்கு உச்சநீதிமன்றத்தில் ஒப்புதல் பெறும்வரை, தற்காலிகமாக 2017- 2018 கல்வியாண்டு முதல் 2020- 2021 கல்வியாண்டு வரையிலான காலகட்டத்துக்கு மருத்துவ மேற்படிப்புக்கானக் கட்டணத்தை நிா்ணயிக்க புதுச்சேரி கட்டண நிா்ணயக் குழுவுக்கு உத்தரவிட்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com