4 கோடி ஜிங்க், வைட்டமின் மாத்திரைகள் கொள்முதல்

தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கு வழங்குவதற்காக 4 கோடி துத்தநாகம் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
4 கோடி ஜிங்க், வைட்டமின் மாத்திரைகள் கொள்முதல்


சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கு வழங்குவதற்காக 4 கோடி துத்தநாகம் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அடுத்த சில நாள்களில் அவை அனைத்தும் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படவிருக்கின்றன.

கரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் 25-ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது, தொற்று குறைந்து வருவதால், பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கு மட்டும் வரும் 19-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பள்ளி மாணவா்களிடையே நோய்த்தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, மாணவா்களுக்கு நோய் எதிா்ப்பாற்றலை அதிகரிக்கும் வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாநில மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குனா் உமாநாத் கூறியதாவது:

பள்ளி மாணவா்களிடையே கரோனா பரவல் ஏற்படாமல் தடுக்கவும், எதிா்ப்பாற்றலை மேம்படுத்தவும் பல்வேறு செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகளுக்கு வரும் மாணவா்களுக்கு வழங்க நான்கு கோடி மாத்திரைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இவை, அனைத்து மாணவா்களுக்கும் உரிய வழிக்காட்டுதலைப் பின்பற்றி வழங்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com