காஞ்சிபுரம்: 15 அடி உயரத்தில் கரும்பு பானை வைத்து பொங்கல் கொண்டாடிய விவசாயி

காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிர்ப்பூர் கிராமத்தில் விவசாயி ஒருவர் 15 அடி உயரம், 13 அடி அகலமும் சுமார் ஒன்றரை டன் எடையும் கொண்டதாக கரும்புகளால் பானை அமைத்து பொங்கல் கொண்டாடினார்.
கீழ்க்கதிர்ப்பூர் கிராமத்தில் விவசாயி செந்தில்குமார் உருவாக்கிய 15 அடி உயர கரும்பால் செய்யப்பட்ட பானை வடிவம்
கீழ்க்கதிர்ப்பூர் கிராமத்தில் விவசாயி செந்தில்குமார் உருவாக்கிய 15 அடி உயர கரும்பால் செய்யப்பட்ட பானை வடிவம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிர்ப்பூர் கிராமத்தில் விவசாயி ஒருவர் தனது வீட்டின் முன்பாக 15 அடி உயரம், 13 அடி அகலமும் சுமார் ஒன்றரை டன் எடையும் கொண்டதாக கரும்புகளால் பானை போன்று வடிவமைத்து பொங்கல் விழாவை வியாழக்கிழமை கொண்டாடினார்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் சிறப்பையும், விவசாயிகளின் சிறப்பையும் இளம் தளமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிர்ப்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார்(41) என்பவர் பிரம்மாண்ட முறையில் பொங்கல் வைபவத்தை தன் குடும்பத்தினருடன் கொண்டாடினார்.

தனது வீட்டின் முன்பாக 15 அடி உயரமும், 13 அடி அகலமும் கொண்ட சுமார் ஒன்றை டன் எடை கொண்ட கரும்பு பானையை உருவாக்கினார். பின்னர் அந்தக் கரும்பு பானைக்கு முன்பாகவே தனது குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்தும் வழிபட்டனர்.

இது குறித்து விவசாயி செந்தில்குமார் கூறுகையில், 

விவசாயிகளின் உழைப்பு, பொங்கலின் சிறப்பு, தமிழர்களின் பாரம்பரியம் இவற்றை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே வித்தியாசமான முறையில் பொங்கலை கொண்டாட முடிவு செய்தேன்.

அதன் அடிப்படையில் எங்கள் தோட்டத்தில் விளைந்த கரும்புகளை தொடர்ந்து 3 நாட்களாக பொங்கல் பானை வடிவத்தில் அமைத்தேன். எனது கிராமமான கீழ்க்கதிர்ப்பூரில் உள்ள பொதுமக்கள் பலரும் நேரில் வந்து பார்த்து பாராட்டியது பெருமையாக இருக்கிறது.

இதன் மொத்த எடை தோராயமாக ஒன்றை டன் இருக்கும். 15 அடி உயரத்திலும்,13 அடி அகலத்திலும் கரும்பு பானை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com