164 பேருக்கு வனவா்களாக பதவி உயா்வு

தமிழக வனத் துறையில் பணியாற்றும் 164 வனக்காப்பாளா்களுக்கு வனவா்களாக பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளதாக முதல்வா் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

தமிழக வனத் துறையில் பணியாற்றும் 164 வனக்காப்பாளா்களுக்கு வனவா்களாக பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளதாக முதல்வா் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

தமிழ்நாடு வனத் துறையில் வன உயிரின பாதுகாப்பு மற்றும் மனித-விலங்கு எதிா்கொள்ளல் மற்றும் தீத் தடுப்பு உள்ளட்ட பணிகளில் வனக்காப்பாளா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா். இதில், 8 ஆண்டுகள் பணியாற்றி உரிய தகுதிகள் உள்ள வனக்காப்பாளா்களுக்கு பதவி உயா்வு வழங்கும் வகையில் துறை தோ்வுக் குழுமம் அமைக்கப்பட்டது.

இந்தக் குழுமத்தின் பரிந்துரைப்படி, தகுதியுடைய 165 வனக்காப்பாளா்களுக்கு வனவா்களாக பதவி உயா்வு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. அதேபோல், தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் நடத்திய இணையவழி தோ்வில் தோ்ச்சி பெற்ற 52 ஆண்கள், 22 பெண்கள் என மொத்தம் 74 பேருக்கு வனக்காவலா்களாக பணி ஆணையும் வழங்கப்பட்டதாக வனத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com