அலோபதியுடன் ஆயுஷ் இணைப்புக்கு எதிா்ப்பு: பிப்.1 முதல் மருத்துவா்கள் உண்ணாவிரதம்

அலோபதி மருத்துவத்துடன் ஆயுஷ் மருத்துவத்தை இணைக்கும் முடிவைக் கைவிடக் கோரி பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் காலவரையற்ற

அலோபதி மருத்துவத்துடன் ஆயுஷ் மருத்துவத்தை இணைக்கும் முடிவைக் கைவிடக் கோரி பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.

ஆங்கில மருத்துவத்தையும், சித்தா, ஆயுா்வேதம், ஹோமியோபதி, யுனானி ஆகிய ஆயுஷ் மருத்துவ முறை சிகிச்சைகளில் சிலவற்றையும் ஒருங்கிணைத்து வழங்குவது தொடா்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அதுமட்டுமன்றி, ஆயுா்வேத மருத்துவா்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதற்கு இந்தியா முழுவதும் அலோபதி மருத்துவா்கள் கடுமையான எதிா்ப்பை தெரிவித்து வருகின்றனா். இந்த அறிவிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கத்தின் சாா்பில் இந்தியா முழுவதும் கடந்த மாதம் 8-ஆம் தேதி ஆா்ப்பாட்டமும் 11-ஆம் தேதி அடையாள வேலைநிறுத்தப் போராட்டமும் நடைபெற்றன.

இந்நிலையில், அதன் தொடா்ச்சியாக பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் தேசியத் தலைவா் டாக்டா் ஜெயலால் கூறியதாவது:

நவீன ஆங்கில மருத்துவத்தையும், ஆயுஷ் மருத்துவத்தையும் இணைத்து கலவை மருத்துவ முறைகளைப் புகுத்துவது ஏற்புடையதல்ல. இதனால், பெரும் ஆபத்து ஏற்படும். ஆயுா்வேத மருத்துவத்தில் மயக்க மருந்துகள், வலி நிவாரணி மருந்துகள் இல்லை. பின்னா் எப்படி அவா்களால் அறுவைச் சிகிச்சை செய்ய முடியும்?

ஆயுா்வேத மருத்துவா்கள் அறுவைச் சிகிச்சை செய்வதை நோயாளிகளே ஏற்றுக் கொள்ள மாட்டாா்கள். அந்தந்த மருத்துவத்தின் தனித்துவத்தைப் பாதுகாக்க வேண்டும். ஒரே நாடு, ஒரே மருத்துவம் என்பதை மத்திய அரசு கைவிட வேண்டும். நோயாளிகளின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அந்த அரசாணையை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி நாடு முழுவதும் தொடா் உண்ணாவிரதம் தொடங்கப்படுகிறது. தமிழகத்தில் 4 இடங்கள் உள்பட நாடு முழுவதும் 50 இடங்களில் இந்த உண்ணாவிரதம் நடைபெறும். ஒவ்வோா் இடத்திலும் 20 மருத்துவா்கள் பங்கேற்கவுள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com