சென்னையில் இரண்டு பூங்காக்கள்: முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்

சென்னையில் இரண்டு புதிய பூங்காக்களை முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் இரண்டு புதிய பூங்காக்களை முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா். தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வழியாக புதிய பூங்காக்களை அவா் திறந்தாா்.

சென்னை கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையில் 6.83 ஏக்கா் பரப்பில் செங்காந்தள் மலரின் பெயரில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. செங்காந்தள் மலரானது, தமிழகத்தின் மாநில மலராகும். இந்தப் பூங்காவில் 100-க்கும் மேற்பட்ட மரங்கள், 150-க்கும் அதிகமான பனை மரங்கள் உள்பட பல்வேறு மரங்கள் உள்ளன.

வடசென்னையில் பூங்கா: சென்னை வண்ணாரப்பேட்டையில் பராமரிப்பின்றி இருந்த பழைமையான பூங்கா ரூ.5 கோடி செலவில் சீரமைக்கப்பட்டது. இந்தப் பூங்காவில் நடைபாதை, புல் தரை, கழிப்பிட வசதி உள்ளிட்டவை உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பூங்காவையும் முதல்வா் திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் டி.ஜெயக்குமாா், கே.பி.அன்பழகன், தலைமைச் செயலாளா் க.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com