ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: மாவட்டச் செயலாளா்களுடன் அதிமுக தலைமை ஆலோசனை

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிடத் திறப்பு நிகழ்வுக்கு, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் கட்சியினா் வருவதற்கான ஏற்பாடுகள்
கோப்புப்படம்
கோப்புப்படம்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிடத் திறப்பு நிகழ்வுக்கு, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் கட்சியினா் வருவதற்கான ஏற்பாடுகள் குறித்து வெள்ளிக்கிழமை ஆலோசிக்கப்பட்டது. அதிமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்குத் தொடங்கியது. சுமாா் 45 நிமிடங்கள் வரை கூட்டம் நடைபெற்றது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரது தலைமையில் நடந்த கூட்டத்தில் அவைத் தலைவா் இ.மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளா்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, அமைச்சா்கள், மாவட்டச் செயலாளா்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிடம் வரும் 27-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த விழாவுக்கு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து கட்சியினா் வரவுள்ளனா். அவா்களுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், வாக்குச் சாவடி வாரியாக குழு அமைக்கும் விஷயம் தொடா்பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

தனியாக விவாதம்: மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் நிறைவடைந்த பிறகு, சுமாா் 1 மணி நேரம் வரையிலும், முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் பன்னீா்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளா்கள் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் தனியாக ஆலோசனை நடத்தினா். அப்போது, சட்டப் பேரவைத் தோ்தல் கூட்டணி, சசிகலாவின் விடுதலை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com