சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.37,280-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த 5 நாள்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வந்தது.
இந்நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.37,280-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து, ரூ.4,660 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து, ரூ.71.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து, ரூ.71,400 ஆகவும் இருந்தது.
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,660
1 பவுன் தங்கம்...............................37,280
1 கிராம் வெள்ளி.............................71.40
1 கிலோ வெள்ளி.............................71,400
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,675
1 பவுன் தங்கம்...............................37,400
1 கிராம் வெள்ளி.............................72.40
1 கிலோ வெள்ளி............................72,400.