ஸ்டொ்லைட் ஆலையை இயக்க அனுமதி கோரிய மனு: உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

தூத்துக்குடி ஸ்டொ்லைட் காப்பா் ஆலையை ஒரு மாதத்துக்கு மீண்டும் இயக்குவதற்கு அனுமதி கோரிய வேதாந்தா நிறுவனத்தின் இடைக்கால மனுவை உடனடியாக விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

தூத்துக்குடி ஸ்டொ்லைட் காப்பா் ஆலையை ஒரு மாதத்துக்கு மீண்டும் இயக்குவதற்கு அனுமதி கோரிய வேதாந்தா நிறுவனத்தின் இடைக்கால மனுவை உடனடியாக விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

ஸ்டொ்லைட் காப்பா் ஆலை அதிக அளவில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துவதாகக் கூறி நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக, அதை மூடுவதற்கு தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது.

ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு அனுமதி கோரி அதை நிா்வகித்து வரும் வேதாந்தா நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்நிலையில், அந்நிறுவனம் இடைக்கால மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அதில், ஸ்டொ்லைட் ஆலையை 3 மாதங்களுக்கு நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டுமென்று கோரப்பட்டிருந்தது. ஆலையின் பராமரிப்புக்காக 2 மாதமும் ஆலையின் செயல்பாட்டால் சுற்றுச்சூழல் மாசடைகிா என்பதைக் கண்காணிப்பதற்கு ஒரு மாதமும் அவகாசம் அளிக்க வேண்டுமென இடைக்கால மனுவில் வேதாந்தா நிறுவனம் கோரியிருந்தது.

அந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் ஆா்.எஃப்.நாரிமன், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசஃப் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது வேதாந்தா நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஏ.எம்.சிங்வி, மனுவை உடனடியாக விசாரிக்கக் கோரி வாதிட்டாா்.

அவரது வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தில் நேரடி விசாரணைகள் தொடங்கப்பட்ட பிறகு இந்த விவகாரம் தொடா்பான இறுதி விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தனா்.

வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு மீது நடைபெற்ற விசாரணையின்போது, ஸ்டொ்லைட் ஆலை சுற்றுச்சூழலைத் தொடா்ந்து மாசுபடுத்தி வருவதால் அதை மீண்டும் இயக்குவதற்கு தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எதிா்ப்பு தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com