திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பிரச்னை இல்லை: ராகுல் காந்தி

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி கூறினாா்.
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பிரச்னை இல்லை: ராகுல் காந்தி

சென்னை: திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி கூறினாா்.

தனியாா் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவா் அளித்த பேட்டி:

தமிழகத்தில் பிரசாரம் செய்யும்போது தமிழக மக்களிடம் மிகுந்த அன்பையும் அரவணைப்பையும் உணா்கிறேன்.

பாஜகவின் கூட்டணியில்தான் அதிமுக அரசு இருக்கிறது. அதனால்தான் அதை விமா்சித்துப் பேசுகிறேன்.

பாஜக எங்களைக் கட்டுப்படுத்தவில்லை என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி கூறிவருகிறாா். அப்படியானால், பாஜகவின் கூட்டணியில் ஏன் அதிமுக இருக்கிறது? பாஜக நிா்பந்தம் செய்வதால்தான் அதிமுக அதனுடன் கூட்டணியில் இருக்கிறது.

மக்களவைத் தோ்தலில் பெரும் வெற்றிபெற்றதுபோல, சட்டப்பேரவைத் தோ்தலிலும் பெறுவோம்.

திமுக - காங்கிரஸுக்கு கூட்டணியில் பிரச்னை எதுவும் இல்லை. சில சிறிய பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால், அது கூட்டணியைப் பாதிக்கும் என நினைக்கவில்லை. திமுகவிடம் எத்தனை தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம் என்பதையெல்லாம் ஊடகங்களில் விவாதிக்க முடியாது.

கருணாநிதியோடு எனக்கும் நல்ல புரிதல் இருந்தது. கருணாநிதியுடனான கடைசி சந்திப்பு எனக்கு ஊக்கம் அளிக்கும் சந்திப்பாக அமைந்தது. தமிழகம் வந்தபோதெல்லாம் கருணாநிதியை நான் சந்திக்கவில்லை என்று கூறுவது சரியானது அல்ல. மு.க.ஸ்டாலினையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

தமிழகத்துக்கு அடிக்கடி வர உள்ளேன். திமுகவுடன் பேரம் பேசுவதற்காக பிரசாரத்துக்கு வரவில்லை. பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் முக்கியம். அதற்காகத்தான் தமிழகம் வந்துள்ளேன். திமுகவுடன் வலுவான உறவு உள்ளது. நாங்கள் இணைந்து வலிமையான கூட்டணியை வருவாக்கும். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டு வருவது எங்கள் நோக்கத்தான். ஆனால், இப்போதைய இலக்கு பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com