ராணிப்பேட்டை சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோவில் 10-ம் ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ராணிப்பேட்டை சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோவிலில் 10 ஆம் ஆண்டு தொடக்க விழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ராணிப்பேட்டை சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோவில் 10-ம் ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
ராணிப்பேட்டை சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோவில் 10-ம் ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ராணிப்பேட்டை சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோவிலில் 10 ஆம் ஆண்டு தொடக்க விழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் மணியம்பட்டு சபரி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோவிலில் 10 ஆம்ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை மகா கணபதி ஹோமம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, உஷா பூஜை, கலச பூஜை, மஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமம், கலசாபிஷேகம், உச்ச பூஜை, மஹா தீபாராதனை, பகவதி சேவா அத்தாழ பூஜையும் சிறப்பாக நடைபெறுகிறது. 

தொடர்ந்து நாளை சனிக்கிழமை (ஜன.30) காலை மகா கணபதி ஹோமம், உஷ பூஜை, சுக்ரத ஹோமம், கலச பூஜை, கலசாபிஷேகம், உச்ச பூஜை மகாதீபாராதனை, சுதர்சன ஹோமம், புஷ்பாபிஷேகம், ஸ்ரீ பூத பலிபூஜை, உற்சவமூர்த்தி ஆலயத்தை சுற்றி வருதல் இரவு ஸ்ரீ நவ சபரி சாஸ்தா சமிதியினரின் பஜனையும் நடைபெறுகிறது. 

மேலும் ஞாயிற்றுக்கிழமை காலை மகா கணபதி ஹோமம், உஷா பூஜை கலச பூஜை கலப பூஜை கலசாபிஷேகம் உச்ச பூஜை மாலை 5.30 மணிக்கு கோவில் குருசாமியும், சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் வட தமிழக பொதுச்செயலாளர் குருசாமி ஜெயச்சந்திரன் தலைமையில் சிறப்பு பதினெட்டாம் படி பூஜையும்,  இதனைத் தொடர்ந்து மஹா தீபாராதனையும், இரவு 7 மணி அளவில் வீரமணி ராஜீவின் இன்னிசை நிகழ்ச்சியும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது. இதில் திரளான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்தபடி சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். உடன் அனைவரும் சானிடைசர் கிருமி நாசினியை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். என கோவில் குருசாமியும், சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் வட தமிழக பொதுச்செயலாளர் குருசாமி ஜெயச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com